Vijay தலைமையிலான Tamilaga Vettri Kazhagam, தனது முதல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலேயே 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று, அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இது முதல் முறையாக போட்டியிட்ட ஒரு கட்சிக்கான அபூர்வ சாதனையாகும். கட்சியின் நிறுவனர் மற்றும் நடிகரான விஜய் நேரடியாக களமிறங்கி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வலுவான முன்னிலை பெற்றார். இந்த தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன. டிஎம்கே – அதிமுக என்ற இரு கட்சிகளின் ஆதிக்கத்திற்கு அப்பால், நம்பகமான மூன்றாவது மாற்றத்தை மக்கள் ஏற்கத் தயாராக உள்ளனர் என்பதை இது வெளிப்படுத்தியது. தமிழக அரசியலில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வெற்றிகரமாக வந்த மிகப்பெரிய நட்சத்திரமான M. G. Ramachandran (எம்.ஜி.ஆர்.) திரைப்படங்களில் ஒருபோதும் மது அருந்துவதோ, புகைபிடிப்பதோ போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை. அவர் வெளிறிய நிறத்துடன் திரையில் தோன்றினார். ஆனால் தன்னை அடுத்த எம்.ஜி.ஆர். என…
Author: Karthick
சென்னை: தமிழக அரசியல் பரபரப்பாக மாறியுள்ள நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான Vijay முதல்வராக பதவியேற்க முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் பொறுப்பு ஆளுநர் Rajendra Vishwanath Arlekar அவர்களை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். தமிழக சட்டசபையில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியை அமைக்க குறைந்தது 118 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம். சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் இணைந்ததால், தவெகவின் மொத்த பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இருந்தாலும், ஆட்சியை அமைக்க இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மேலும் ஆதரவைப் பெறுவதற்காக, திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளிடம்…
தஞ்சாவூர் அரசியல் நிலவரம் தற்போது மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது.நாங்கள் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் வந்த முக்கிய முடிவுகள் பின்வருமாறு 👇 📊 கருத்து கணிப்பு முடிவுகள்:1️⃣ TVK – 32% முதல் 40% வரை2️⃣ DMK – 25% முதல் 35% வரை3️⃣ BJP – 25% முதல் 30% வரை4️⃣ NTK – 10%5️⃣ Others – 1% இந்த கணிப்பின் படி, தற்போது TVK முன்னிலையில் இருப்பதாக தெரிய வருகிறது.ஆனால் DMK மற்றும் BJP கட்சிகளும் கடும் போட்டியில் உள்ளன. ⚠️ முக்கிய குறிப்பு:இது ஒரு ஆரம்ப கட்ட கருத்து கணிப்பு மட்டும் தான்.உண்மையான நிலைமை மற்றும் மாற்றங்கள் அடுத்த 2–3 நாட்களில் வரும் Live Report / Ground Report மூலம் தெளிவாக தெரிய வரும். 📢 மக்கள் கருத்து இன்னும் மாறக்கூடும், அதனால் இறுதி முடிவுகள் வேறுபட வாய்ப்பு உள்ளது.
தஞ்சாவூர் அருகே மேலகளக்குடியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியமூர்த்தியின் மகள் காவியா (26), ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் (29) பெயின்டராக வேலை பார்த்துவரும் இவர், காவியாவுடன் சுமார் 13 ஆண்டுகளாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்றாலும், காவியாவுக்கு அஜித்குமாரை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், உறவினர் இளைஞருடன் திருமணம் செய்து வைக்க கடந்த நவம்பர் 23ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர். இந்த நிச்சயதார்த்த விபரத்தை காவியா, அஜித்குமாரிடம் மறைத்து வைத்து வழக்கம்போல பேசிவந்ததாக தெரிகிறது. இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன் இரவு, தனது நிச்சயதார்த்தம் நடந்த விபரத்தையும் புகைப்படங்களையும் அஜித்குமாருக்கு காவியா அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், நேற்று காலை பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்ற காவியாவை கொத்தட்டை காலனி பகுதியில் வழிமறித்து, “நிச்சயதார்த்தம் ஆனதை ஏன்…
தஞ்சை பெரிய கோவில் பார்க்கிங் தென்மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு மேம்பாலம் வழியாக வரும் போது தூரத்தில் உள்ள இந்த சிறிய அறிவிப்பு பலகை பலருக்கும் தெரியும்படியாக இல்லாததால் இடது பக்கம் திரும்பி சோழன் சிலை வந்து யு டர்ன் எடுத்து மறுபடி பார்க்கிங் பகுதிக்கு வருகின்றனர்.கொஞ்சம் பெரிதாக மேம்பாலம் இறக்கத்தில் வரும் போதே தெரியும் படியாக வைப்பார்களா தஞ்சை மாநகராட்சி.
மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனுவினை அளித்து கேட்டுக் கொண்டார்.
ஜோடிகளே உஷார்..! தனியார் விடுதியில் ரகசிய கேமரா-வசமாக சிக்கிய ஊழியர்! உதகை தனியார் விடுதியில் ரகசிய கேமரா.வசமாக சிக்கிய ஓட்டல் ஊழியர். ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி..? நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்திருப்பதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பெண்களை வீடியோ எடுத்த ஊழியர்.. ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சாஹத் தனது மனைவியுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார், அப்போது அவர்கள் தங்கியுள்ள அறையின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மசினகுடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலிசார் நடத்திய விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தது…
கேமராவை தூக்கி ஸ்டாலின் அதகளம்! போட்டோகிராபர்கள் குதூகலம்! இன்று உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, தனது இல்லத்தில் புகைப்படக் கலைஞர்களை படம் எடுத்து மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நினைவுகளை காட்சிப் பேழைகளாக உறையவைப்பவை புகைப்படங்கள். உலக புகைப்பட தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. லூயிஸ் டகுரே என்பவர் புகைப்பட செயல்முறையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதை நினைவுகூறும் வகையில் உலக புகைப்பட தினம் 1837ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுஇந்த நாளில் சிறந்த புகைப்படங்கள் போற்றப்படுகின்றன. புகைப்பட கலைஞர்கள் பாராட்டப் படுகிறார்கள். கருப்பு வெள்ளை புகைப்படங்கள் முதல் டிஜிட்டல் வரை இன்று நாம் புகைப்படங்களை விரும்பும் விதத்தில் மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. காலத்தை உறையவைக்கும் கலைஞர்களான புகைப்படக் கலைஞர்களைக் கொண்டாடும் நாளாக இன்றைய தினம் இருக்கிறது.இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் ஊடக செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஏராளமானோர் நின்றிருந்தனர். அப்போது வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின், புகைப்படக்…
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி ( FDFS) 9 மணிக்கு வெளியானது. இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது. மதுரையில் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் வந்தனர். கர்நாடகாவில் காலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் முதல் காட்சி வெளியானது. ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல்…
அதிர்ச்சி… நடிகர் பிரகாஷ் ராஜ் வந்ததால் கல்லூரி வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்! தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில். கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இது பற்றி அறிந்த மாணவர்களில் சிலர் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாகத்திற்குள் நடத்தலாம் என கேள்வி எழுப்பியதோடு, நடிகர் பிரகாஷ் ராஜிக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கல்லூரிக்கு வரக்கூடாது எனக்கூறினர். இதனையடுத்து, கல்லூரி வளாகம் முன் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு…

