Author: Karthick

Pooja cartons are pinned with the best infrastructural base of infallible standing and we enrich ourselves by bringing all the modern amenities into our organization. This is the reason we achieve make our customers completely satisfied. We have an expert team of people who are skilled their workforce to make the cutting-edge packaging boxes with the high tech machinery and the advanced tools that aid the team to earn more clients. These kind of diligent workforce and the best management team has lead us to earn clients from highly reputed industries including Renowned Auto product Manufacturing Limited, Dr. Reddy’s Laboratories…

Read More

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘லைகா’ நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.  இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (04.07.2022) விக்ரம் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்-கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி கார்த்தி, இப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக சமூக…

Read More

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்து திணறி வந்தது.இன்று தொடங்கிய 3-வது நாள் போட்டியில் ஒருமுனையில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாட மறுமுனையில் ஸ்டோக்ஸ் 25 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பேர்ஸ்டோ சவால் அளித்து வந்தார். பவுண்டரிகளாக விரட்டி அதிரடி காட்டிய அவர் 119 பந்துகளில் சதம் அடித்த அவர் 106 ரன்களில் ஷமி பந்துவீச்சில் வெளியேறினார்.தொடர்ந்து…

Read More

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தெக்கூர் பஞ்சாயத்தை சேர்ந்தது குலாலர் தெரு கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக பானை மற்றும் குதிரை, யானை போன்ற பல்வேறு வகையான மண் கலை பொருட்களை செய்து வரும் கிராமத்தினர். இந்த குலாலர் எனும் கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசிக்கின்றனர். அதில் நிறைய குடும்பங்கள் இந்த பானை தொழிலையே ஆண்டாண்டு காலங்களாக செய்துவருகின்றனர்.அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 71 வயதான பானை செய்யும் தொழிலாளி முத்துவிடம் பேசும்போது அவர் கூறுகையில், ‘என் பெயர் முத்து வேளார். நாங்கள் வேளாளர் வகையினை சேர்ந்தவர்கள். வேளாளர்கள் உருவான காலத்திலிருந்தே நாங்கள் இந்த பானை தொழிலை செய்து கொண்டு‌ இருக்கின்றோம் . நான் என் அப்பாவிடம் கற்றுக்கொண்ட பிறகு கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்த மண் தொழிலை நான் செய்து கொண்டிருக்கின்றேன். இந்த தொழிலை செய்வதற்கு சிரமமாக இருந்தாலும் பரம்பரைத் தொழிலாக இருப்பதால் அதை விட்டுக்கொடுக்காமல்…

Read More

தமிழகத்திலேயே தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயற்கை கால், கைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் 14 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தில் செயற்கை கால்களை முதல்வர் ரவிக்குமார் வழங்கினார். செயற்கை கால் உபகரணங்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் ஆறுமுகம், நிலைய மருத்துவர் செல்வம், உதவி நிலைய மருத்துவர் முகமதுஇத்தரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் குமரவேல் வரவேற்றார். இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் கலந்துகொண்டு, 14 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார். தஞ்சையில் உற்பத்தி இந்த செயற்கை கால்கள் அனைத்தும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதற்கான அனைத்து உபகரணங்களும் வழங்கி, மருத்துவக்கல்லூரியில் இயங்கும் செயற்கை அவயங்கள் உருவாக்கும் நிலையத்தில் செய்யப்பட்டவை…

Read More

தஞ்சை மாநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த 100 இடங்களில் வருகிற 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. முகாமை 3 அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்கள். தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்றுமாலை நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி பேசியதாவதுமாநகர பகுதிகளில் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் இல்லை. ஆக்சிஜன் வசதியுடன் எல்லா ஆஸ்பத்திரியும் தயார் நிலையில் உள்ளது. 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் காய்ச்சல் யாருக்காவது இருந்தால் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.…

Read More

பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. https://twitter.com/LycaProductions மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சனிக்கிழமை வெளியிட்டனர். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாகும், முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன்: பாகம் 1 (பிஎஸ் 1), விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களைக் கொண்ட பிரம்மாண்ட படம். 1950 களில் தொடராக வெளிவந்த கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பெயரிடப்பட்ட தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. அறிக்கைகளின்படி, PS 1 சோழப் பேரரசிற்குள் நடக்கும் பிரிவு அதிகாரப் போராட்டங்களைக் கண்காணிக்கும், அரசின்…

Read More

 நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது இந்த பீரங்கி மேடு. இது தஞ்சாவூர் கொடிமரத்து மூளை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பீரங்கியானது நாயக்க மன்னர் காலத்திலே உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1,600 ஆம் ஆண்டுகளில் ஆண்ட ரகுநாத நாயக்க மன்னர் 1645 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த பீரங்கியை உருவாக்கியதாக கூறப்படுகிறது. பீரங்கி செய்யும் தொழில்நுட்பம்: இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பு பட்டைகளால் உருவாக்கப்படும். ஆனால் இந்த பீரங்கியோ தேனிரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது. தேன் இரும்பு என்பது பல்வேறு பகுதிகளை சிறிது சிறிதாக செய்து பின்பு ஒன்றோடொன்று ஒட்ட வைத்து மிக முக்கியமான இரும்பு பொருட்களை இணைக்கக்கூடிய உருக்கு உலை இணைப்பு தொழில்நுட்பம் மூலமாக செய்யப்பட்ட பீரங்கியாகும். அதனால் சுத்தமான எஃகினால் ஆன பீரங்கியாக காணப்படுகிறது. தனித்து காணப்படும் பீரங்கி: உலக…

Read More

தஞ்சை கீழவாசல் சரபோஜி சந்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தஞ்சை கீழவாசல் சந்தையில் சுமார் 308 கடைகள் கட்டப்பட்டு பொது பயன்பாட்டுக்கு திறந்து விட பட்டுள்ளது. சரபோஜி சந்தை என பெயரிடப்பட்டு கீழவாசல் சந்தை வளாகமே ஒரு புது பொலிவுடன் காணப்படுகிறது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில்தான் தஞ்சையின் மொத்த மளிகை பொருட்கள், எண்ணெய், நாட்டு மருந்துகள், காய்கறி, பூக்கள் உள்ளிட்ட அனைத்துவகை பொருட்களின் வணிகம் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஏகபோகமாக நடைபெறும். மழைக்காலங்களில் சந்தை சேறும் சகதியாய் மட்டுமல்ல வாகன போக்குவரத்து நெரிசலான பகுதியாகவும் காணப்படும். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ் நீண்ட நெடிய பார்க்கிங் வசதி கடைகளை சுற்றிலும் அமைக்கப்பட்டு வணிக வளாகம் மிகவும் சுகாதாரமாகவும் விசாலமான இடவசதியுடனும் காணப்படுகிறது. இதில் ஏறத்தாழ 35 கடைகள் ஜூன் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, வணிகம் தொடங்கப்பட்டது.

Read More

தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மின்சார பழுதுகள் ஏற்படாமல் இருக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நாளை (ஜூலை 1)மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின்தடை பகுதிகள்: தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மின்சார பழுதுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் அதை சரி செய்ய நோக்கில் அடிக்கடி மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் மாதந்தோறும் மின்சார பணிகளுக்காக குறிப்பிட்ட நாளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடும். அந்த வகையில் நாளை (ஜூலை 1) புதுப்பட்டி மற்றும் கந்தர்வக்கோட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றிகள்…

Read More