தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்பு குழு அலுவலருமான ராஜ்குமார் தலைமையிலான குழுவினர், கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வீரசிங்கம் (56) வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அரசு அலுவலரான தன்னை தேர்தல் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், பேராவூரணி போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, வீரசிங்கத்தை நேற்று கைது செய்தனர்.
Breaking News
- Suryakumar Yadav Opens Up After India Snub; Post Wins Fans’ Support
- Gill, KL Rahul Shine with Tons as India Finish Day 1 on 368
- New Political Movement to Be Announced by Annamalai Today
- Tamil Nadu CM Announcement Live Updates: TVK’s Vijay meets TN Governor, stakes claim to form govt with support of 120 MLAs
- விஜய் முதல்வராகும் முயற்சியில் தடை?ஆளுநரின் தயக்கம் – ராஜ்பவனில் சட்ட ஆலோசனை தீவிரம்!என்ன பின்னணி பிரச்சனை?
- Thanjavur Politics Update | முன்னிலையில் யார்? கருத்து கணிப்பு
- “தேர்தல் பணியில் அதிர்ச்சி! பாஜக நிர்வாகிக்கு காப்பு – என்ன நடந்தது?”
- Lover Kills Girlfriend Over Secret Engagement

