சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் ‘டான், பிரின்ஸ்’ படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ‘அயலான்’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மடோன் அஸ்வின் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. https://twitter.com/ShanthiTalkies தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படமும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இனையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Author: Karthick
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் குறையாத செல்வம் தரும் வைகுந்த ஏகாதசி எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது…. கோவிந்தா கோவிந்தா, ரெங்கா ரெங்கா கோஷங்கள் விண்ணதிர பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்ரீநம்பெருமாள்.
Bike Battery The leading Bike battery dealers in Chennai Customers want the best bike batteries and often search for terms like ‘bike battery dealers in Chennai’, ‘bike battery manufacturer in Chennai’, ‘Bike Two Wheeler Batteries In Chennai’. Oftentimes, the search results are quite misleading. Sunrise Power Solutions is among the recognized motorcycle battery dealers in Chennai and we deal with all reputed brands and thus offer customers excellent choice. As the best two wheeler battery dealers in Chennai, we offer outstanding reliability and quality. Exide Battery Exide is a leading name in the battery business and a recognized top player…
புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கும், பெரியநாயகிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, எலுமிச்சை சாறு, கரும்புச் சாறு உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஆட்டோக்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா். ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ஆட்டோக்கள் மூலம் சுற்றுலா செல்வது வழக்கம். கரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக சுற்றுலா பயணம் மேற்கொள்ளாத நிலையில், சென்னையிலிருந்து ஆட்டோக்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் டிசம்பா் 28 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினா். நிகழாண்டு கல்வியின் மூலம் சுதந்திரம் அடையலாம் என்பதை விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஏறத்தாழ 1,500 கி.மீ. பயணம் மேற்கொள்கின்றனா். இதில் இங்கிலாந்து, ஜொ்மனி, அமெரிக்கா, நியூசிலாந்து, இஸ்டோனியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 8 பெண்கள் உள்பட 37 சுற்றுலா பயணிகள் 14 ஆட்டோக்களில் இடம்பெற்றுள்ளனா். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா். மாநகரிலுள்ள தங்கும் விடுதியில் தங்கிய இவா்கள் சனிக்கிழமை காலை பெரியகோயிலுக்கு சென்று கட்டடக் கலையை ரசித்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனா். இதையடுத்து மதுரையை நோக்கிப்…
தொடர்ச்சியாக விசேஷ தினங்கள் வருவதால் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 வரை அதிகரித்தது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என்று விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 120 உயர்ந்து 22 கேரட் தங்கம் 41 ஆயித்து 40 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோன்று ஒருகிராம் தங்கம் ரூ.15 அதிகரித்து 5 ஆயிரத்து 130-க்கு விற்பனையாகிறது.
ரிஷப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப நண்பர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பண்ட் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரிஷாப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப நண்பர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்டின் தாய் சரோஜ் பண்ட்…
இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் தஞ்சாவூர் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்வதற்காக திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரக்கூடிய பிரதான குழாயில் வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே தஞ்சை மாநகரில் உள்ள 37-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரேசிலா, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியது. மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம்…
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மும்பை, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 2007-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பும் (எம்.சி.சி.), விக்டோரியா மாகாண அரசும் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, எதிர் காலத்தில் அல்லது எந்த நாட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்காவது அத்தகைய விருப்பம் இருந்தால் அதை அவர்களே வைத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

