பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். தற்போது நடைபெற்று வரும் ஆறாவது சீசனின் இறுதி நாள் இன்று ( ஜனவரி 22) மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் 21 நபர்கள் கலந்துகொண்ட நிலையில் சுமார் 17 போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் மிட் நைட் எவிக்ஷன் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டார். இதனால் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்களும் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த மூன்று பேரில் யார் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிந்து கொள்ள அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இறுதி நாள் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஓட்டிங் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தில் சின்னத்திரை பிரபலத்தில்…
Author: Karthick
ராய்ப்பூர், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின்போது மைதானத்திற்குள் நுழைந்த சிறுவன், கேப்டன் ரோகித் சர்மாவை ஆரத்தழுவினார். நேற்று ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மைதானத்திற்குள் திடீரென்று நுழைந்த சிறுவன், ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்து, ஆரத்தழுவினார். தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது சிறுவனை இழுத்துச்செல்லும்போது, சிறுவனை காயப்படுத்த வேண்டாம் என்று ரோகித் சர்மாக் கூறினார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக நயன்தாரா நடித்து இருந்தார். அரவிந்தசாமி வில்லனாக வந்தார். ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஜெயம் ரவியும் தனி ஒருவன் 2-ம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் பட வேலைகள் தொடங்கவில்லை. ஜெயம் ரவி வேறு படங்களில் நடித்து வந்தார். ராஜாவும் தெலுங்கு படம் இயக்கினார். இதனால் தனி ஒருவன் 2 கைவிடப்பட்டு விட்டதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவி தனி ஒருவன் 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தனி ஒருவன் 2-ம் பாகத்துக்கான கதை தயாராகிவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முன்பே தனி ஒருவன் 2…
தஞ்சாவூர் நகரின் பல்வேறு பகுதிகளில் 24-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின் நிறுத்தம் தஞ்சை கோர்ட்டு ரோட்டில் உள்ள நகர் துணை மின் நிலையத்தில் 24-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வர நகர், உமாசிவன் நகர், பி.ஆர்.நகர், ெஜபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், டிசிடபிள்யூஎஸ் காலனி, களிமேடு-3 மற்றும் 4. மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடிரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம்,…
தஞ்சாவூர்; மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி, இனிப்புகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது. தஞ்சை பெரியகோவில் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். www.thanjavurnews.in மகரசங்கராந்தி விழா இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திெயம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது.இந்த நந்திெயம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மகர சங்கராந்தி பெருவிழா நடந்தது.…
ராஜ்கோட், இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் யாரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியிம் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை அணியில் பனுகா ராஜபக்சேவுக்கு பதிலாக அவிஷ்கா பெர்ணாண்டோ இடம் பிடித்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷன் மற்றும் சுப்மன்…
சென்னை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருவருக்கும் 6 அடி உயரம் உள்ள செங்கரும்பு தோகையுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் 500 ரூபாய் தாள்கள் 2 கையில் கொடுக்க வேண்டும் என்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு…
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக கலைவாணி என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811325 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsnregsthanjavur@gmail.com ஆகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 300 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை காணாமல் போனது. அந்த திருட்டு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் இந்த திருட்டு தொடர்பாக இருவரை கைது செய்து மேலும் அவர்களிடமிருந்து சிலையை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் கல் சிலை 2019 ஆம் ஆண்டு திருடப்பட்டதாக புகார் காவல் நிலையத்தில் இருந்து வந்த நிலையில் – சிலை கடந்த தடுப்பு பிரிவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து…
கொரோனா வைரஸ் மற்றும் அதன் திரிபு வைரஸ்களுக்கு எதிராக நோய்யெதிர்ப்பாற்றல் எந்த வகையில் செயல்படுகிறது என்ற ஆய்வில், கோவாக்சினை விடவும் கோவீஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த ஒருக் கூற்றையே உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கொரோனா பாதிக்காமல், கோவிஷீல்டு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும் மிக அதிகமான நோய்எதிர்ப்பாற்றலும், அதிக காலம் எதிர்ப்பாற்றல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, காலப்போக்கில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவந்த போதிலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில், மிக நீண்ட காலத்துக்கு ஆன்டிபாடிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாம்

