தஞ்சாவூர்; மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி, இனிப்புகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது. தஞ்சை பெரியகோவில் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். www.thanjavurnews.in மகரசங்கராந்தி விழா இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திெயம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது.இந்த நந்திெயம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மகர சங்கராந்தி பெருவிழா நடந்தது.…
Author: Karthick
ராஜ்கோட், இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் யாரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியிம் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை அணியில் பனுகா ராஜபக்சேவுக்கு பதிலாக அவிஷ்கா பெர்ணாண்டோ இடம் பிடித்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷன் மற்றும் சுப்மன்…
சென்னை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருவருக்கும் 6 அடி உயரம் உள்ள செங்கரும்பு தோகையுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் 500 ரூபாய் தாள்கள் 2 கையில் கொடுக்க வேண்டும் என்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு…
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக கலைவாணி என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811325 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsnregsthanjavur@gmail.com ஆகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 300 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை காணாமல் போனது. அந்த திருட்டு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் இந்த திருட்டு தொடர்பாக இருவரை கைது செய்து மேலும் அவர்களிடமிருந்து சிலையை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் கல் சிலை 2019 ஆம் ஆண்டு திருடப்பட்டதாக புகார் காவல் நிலையத்தில் இருந்து வந்த நிலையில் – சிலை கடந்த தடுப்பு பிரிவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து…
கொரோனா வைரஸ் மற்றும் அதன் திரிபு வைரஸ்களுக்கு எதிராக நோய்யெதிர்ப்பாற்றல் எந்த வகையில் செயல்படுகிறது என்ற ஆய்வில், கோவாக்சினை விடவும் கோவீஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த ஒருக் கூற்றையே உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கொரோனா பாதிக்காமல், கோவிஷீல்டு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும் மிக அதிகமான நோய்எதிர்ப்பாற்றலும், அதிக காலம் எதிர்ப்பாற்றல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, காலப்போக்கில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவந்த போதிலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில், மிக நீண்ட காலத்துக்கு ஆன்டிபாடிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாம்
Kasikannu catering is an award-winning catering service in Chennai and is the food service provider with the largest number of chefs in Chennai (over 375 chefs!). Driven by the philosophy that satisfied customers are the best asset and any investment to enhance customer satisfaction is the best investment, Kasikannu brings a fresh perspective to the domain of marriage catering in Chennai. We desire to exceed customer expectations and bring total perfection to our every activity to make your life events even more memorable. Driven by a passionate team and dedicated leadership, we set and adhere to high standards always. South…
பதிப்பாளர்கள் – எழுத்தாளர்கள் – வாசகர்களின் மிகப்பெரிய கூடலான சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான பொற்கிழி விருதுகளை வழங்கி மகிழ்ந்தேன். நூல்வெளி, ஆய்வுக்களம், அறிவுத்தளம் என நமது அரசு போட்டு வருவது எட்டுக்கால் பாய்ச்சல். அறிவுத்தீ பரவட்டும்!
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற, தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான சிறப்பு புறநோயாளிகள் பிரிவையும், மேலும் இம்மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடனும், Menadora Foundation என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் துணையுடன் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய மது, போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையத்தையும் தொடங்கி வைத்த போது.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது அட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. புனேயில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் படுமோசமாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் 5 நோ-பால்கள் வீசி அதற்கு பிரீஹிட்டும் வீசியது தான் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ நோ-பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார். அவர் 2 ஓவர்களில் 37 ரன்களை வாரி இறைத்தார். இதே போல்…

