வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என கேப்டன் கே.எல்.ராகுல் கூறினார். சாட்டிங்காம், இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடேயேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அனி 404 ரன்னும், வங்காளதேச அணி 150 ரன்னும் குவித்தது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வங்காளதேச அணி 4ம் நாள் ஆட்ட நேர…
Author: Karthick
இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதின பெங்களூரு, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதின இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது. பின்னர் 279 என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.இதனால் 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2012,2017 ,2022 என 3 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.
மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாக பிரான்ஸ் அணி இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியின் 5-வது நிமிடத்திலே பிரான்ஸ் அணி வீரர் தியோ ஹெர்னண்டஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்து ரசிகர்களை பரவசமடையச் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. இந்த சூழலில் ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ராண்டல் கோலோ முஆனி தனது அணிக்கான…
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம். 2.66 கோடி நுகர்வோரில் 11 மணி நிலவரப்படி இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வாரியம் மூலம் வரும் வருவாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்புக்கு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். ஆதார் மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச., 25 மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது. மின் ஊழியர்கள் ஸ்ரைக் குறித்து அமைச்சர்…
அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன. இதில், இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது. இட்டாநகர், இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய – சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த மோதலுக்கு பின் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளன. அதன் பின் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிழக்கு லடாக்கின் ரின்சன் லா பகுதியிலும் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியா – சீன படைகள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலபிரதேச எல்லையில் இரு படைகளும் மோதிக்கொண்டுள்ளன. அருணாச்சலபிரதேசத்தின் தவாங்…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது. தோகா, கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டியதால் களத்தில் சூடுதெறித்தது. இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில்…
மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று தொடங்குகிறது. தஞ்சாவூர் மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று தொடங்குகிறது. இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அறிவிக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் இளநிலை செயலக உதவியாளர், பிரிவு எழுத்தர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட 4500 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலை படிப்பு தரம் தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இத்தேர்விற்கான வயது…
Course Overview SOLIDWORKS is powerful 3D CADD software that helps in shortening the design cycle and increases productivity. SOLIDWORKS is the world’s leading product design software that facilitates us to deliver innovative solutions to the engineering or technical industries. Dynamic Cad offers the best classroom training in India that helps the learner to get in-depth knowledge of various tools and features available in the Solidworks software. Being a 2D and 3D parametric modeler, SOLIDWORKS is essential to most engineering and drafting systems. Dynamic Cad provides software training on a wide range of courses in the field of CAD, CAM &…
திருச்சியில் 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கால்பந்து போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ள பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுக்கு தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கால்பந்து விளையாட்டிற்கான மாணவ, மாணவிகளுக்கு தேர்வு சென்னையில் நடைபெற இருந்தது மழையின் காரணமாக இந்த தேர்வு போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநில கால்பந்து விளையாட்டு தேர்வு போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) மாணவிகளுக்கும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாணவர்களுக்கும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தேவைப்படும் ஆவணங்கள் இதற்கான வயது வரம்பு 1-1-2004 அன்று அல்லது அதற்கு பின் பிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக இருத்தல் வேண்டும். இதில்…
One of the major concerns of Indian Medical students while trying to gain admission to a good medical institution is the exorbitant donation fee demanded by private universities. Vaagai Educare helps students to gain admission to reputed colleges abroad at an affordable fee. Here are some of the reasons why learning MBBS abroad is one of the best choices ever: Globally recognized degree with advanced technological learning in medicine Institutions connected with well-reputed hospitals to facilitate clinical rotations. High passing percentile in the M.D. program, NExT / FMGE and USMLE. AAIMS, BCM, DMSFI & UV Gullas recognized by WHO &…

