Author: Karthick

தஞ்சாவூர் புயல் எச்சரிக்கை எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள் தயாராக உள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (அதாவது இன்று) புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதால் 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 251 நிவாரண மையங்கள் புயல் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள்,…

Read More

வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மிர்பூர், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.- இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.…

Read More

அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்யும் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். தனுசும், சிவராஜ்குமாரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவராஜ்குமார் கூறும்போது, ”நான் தனுசின்…

Read More

ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறக்கூடிய கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன் குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Read More

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள். தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே. சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் ” சிங்கலிகா” என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப்…

Read More

திருப்பதி மலையில் இருந்து இறங்கி வந்து அந்த பெருமாளே உங்கள் பண கஷ்டத்தை தீர்த்து வைப்பார். இந்த 1 பொருளின் வாசம் உங்கள் வீட்டில் நிறைவாக இருந்தால். எவ்வளவு பெரிய பெரிய பண கஷ்டத்தை கூட சுலபமாக ஒரு நொடிப் பொழுதில் தீர்த்து வைக்கக்கூடிய வல்லமை கொண்டவர் தான் பெருமாள். அவருடைய கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் போதும். பொன் பொருள் சொத்து சுகம் அனைத்தும் நம்மை தேடி வந்துவிடும். எந்த ரூபத்தில் அதிர்ஷ்ட காற்று நமக்கு வீசிது என்று நமக்கே தெரியாது. ஆனால் வறுமை பின்வாசல் பக்கம் சென்று இருக்கும். மகாலட்சுமி முன் வாசல் பக்கமாக வீட்டிற்குள் வந்து கொண்டே இருப்பாள். அந்த பெருமாளின் ஆசிர்வாதத்தை வாங்க தினம் தினம் நாம் பெருமாள் வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும். பெருமாள் வழிபாட்டில் அதிகப்படியாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பொருள் என்றால் அது பச்சை கற்பூரம். பெருமாள் கோவிலில் பெருமாளுக்காக…

Read More

நல்ல நடவடிக்கை District Collector, Thanjavur பேருந்தை மட்டும் பறிமுதல் செய்வது பயன் இல்லை இந்த குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ஓட்டுநர் நடத்துநர் உரிமையாளர் தண்டிக்க பட வேண்டும் ஏன் என்றால் இது விபத்து அல்ல திட்ட மிட்ட வன்முறை … ஒரு 8 ஆண்டுகளுக்கு முன் குழந்தை ஏசு கோவில் அருகே போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மோதி ஒரு அம்மா இறந்தார் குழந்தை படுகாயம் அடைந்தார், அது விபத்து அல்ல கொலை ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் திட்டமிட்டே தங்கள் வருமானத்திற்காக தவறான திசையில் வந்து ஒருவரை படுகாயம் அடைய செய்து மற்றொருவரை கொலை செய்தவர் ஆனால் அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை , இதனால் அது போன்ற தனியார் பேருந்துகள் மற்றும் ஒட்டுநர்கள் மீண்டும் பணிக்கு வந்து அதே தவறை மீண்டும் செய்கிறார்கள் இது இனியும் வேண்டாம் ஓட்டுநர்களுக்கு, நடத்துனர்கள்…

Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 கலை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது 1 தஞ்சாவூர் வீணை 2 தலையாட்டி பொம்மை 3 தஞ்சாவூர் ஓவியம் 4 தஞ்சாவூர் கலை தட்டு 5 நெட்டி வேலைப்பாடு 6 சுவாமி மலை வெண்கல சிலை 7 திருபுவனம் பட்டு சேலை 8 நாட்சியார் கோவில் குத்து விளக்கு

Read More

தர்பூசணியில் 90% நீர் உள்ளது, இது கோடையில் நீரேற்றமாக இருக்க பயனுள்ளதாக இருக்கும். தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இந்த பொருட்கள் உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்கள் அல்லது எதிர்வினை இனங்கள் எனப்படும் மூலக்கூறுகளை அகற்ற உதவும். வளர்சிதை மாற்றம் போன்ற இயற்கை செயல்முறைகளின் போது உடல் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது. புகைபிடித்தல், காற்று மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மூலமாகவும் அவை உருவாகலாம். சுமார் 154 கிராம் எடையுள்ள ஒரு கப் தர்பூசணி துண்டுகள் 12.5 மில்லிகிராம் வைட்டமின் சி அல்லது ஒரு நபரின் தினசரி தேவைகளில் 14% முதல் 16% வரை வழங்குகிறது. Health benefits of Water Melon 1. Helps you stay hydrated as it contains 90% of water. 2. It have anti Cancer effects as it contains several plant compounds including Lycopene…

Read More

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளதால் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை 3 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More