Author: Karthick

நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 7 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இருவரையும் சமரசப்படுத்தி சேர்த்து வைக்க சில பிரபலங்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து இருவரும் தீவிரமாக படங்களில் நடித்தனர். இந்த நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும், இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. இதனை இருவரும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்…

Read More

முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆக்லாந்து, இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார். வழக்கமான கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. 20 ஓவர் தொடரில் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. 20…

Read More

அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் தற்போது ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ்…

Read More

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் ‘காந்தாரா’ திரைப்படம் வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். , ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காந்தாரா திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது . அமேசான் பிரைமில் இன்று வெளியானது . தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

2024 டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாய், 8வது 20 ஓவர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், அடுத்த டி20 உலகக்கோப்பை 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அந்த உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அணிகள் முன்னேறி உள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. அதில் ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன. நியூசிலாந்து,…

Read More

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. நேப்பியர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி பிலிப்ஸ் மற்றும் கான்வேயின் அரைசதத்துடன் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்…

Read More

ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது தோற்றத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு உள்ளனர். ஜெயிலர் படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகளும் ஒவ்வொருவராக படப்பிடிப்பில் தற்போது இணைந்து வருகிறார்கள். அவர்கள் தனியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு இறுதியில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை எடுக்க உள்ளனர். ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரும் இப்போது படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். முன்னதாக ரஜினிகாந்தை சிவராஜ்குமார் சந்தித்து பேசினார். அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்து இருக்கிறார் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பில் சிவராஜ்குமாரும், சிவகார்த்திகேயனும் சந்தித்த புகைப்படங்களும் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா அல்லது சிவராஜ்குமாரை சந்திக்க…

Read More

தஞ்சையில், பூட்டிய வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். பகலில் குப்பை பொறுக்குவது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவரை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் மடக்கினர். பூட்டிய வீட்டில் திருட்டு தஞ்சை வங்கி ஊழியர் காலனியில் கடந்த 9-ந் தேதி பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டது. இதில் ஒரு வீட்டில் மட்டும் 19½ பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. மற்ற 2 வீடுகளில் எதுவும் திருடு போகவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், போலீஸ்காரர்கள் புவனேஷ், சிவக்குமார், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் அந்த பதிவுகளை கொண்டு தீவிரமாக தேடினர். இதில் அந்த வாலிபர் சென்னை எண்ணூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சின்ன சிவா என்ற…

Read More

சென்னை, விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது இந்த நிலையில்’ டிஎஸ்பி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Read More

தென் இந்தியாவில் வெற்றிப்படங்களின் கதாநாயகியாக பெயர் பெற்றவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் நடித்த முதல் படம் ‘டோலி சஜா கே ரக்கீனா’ 1997-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ஜோதிகா 2001-ல் ‘லிட்டில் ஜான்’ என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை, தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். துஷார் இத்ராணி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் காதல் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார்.

Read More