தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். https://www.youtube.com/watch?v=zuVV9Y55gvc இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த நிலையில், வாரிசு’ படத்தின் ரஞ்சிதமே… ரஞ்சிதமே எனத் தொடங்கும் முழு பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் மானசி எம்.எம் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார் . இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது
Author: Karthick
Digital marketing is consistent with its performance in drawing the attention of viewers. The vast use of the internet among users causes this advantage. The possibility of reaching maximum users is easier these days. So, using digital marketing as a primary asset to improvise your business growth is quite common. As a businessman, your idea to establish a strong impression among many users brings ultimate results for sure. In that case, SK WebVenture Best Website Design Company in Thanjavur assists you well. With our support, you will raise your online dominion easily and precisely. No fake promises here! We deliver…
1. KP Webtech KP Webtech is an independent company of multi-disciplinary experts with a vision to empower clients with enriching and inspiring solutions. We have helped clients conquer the digital frontier in an ever-changing online landscape and offer exceptional service tailored to your brand and needs. With rich capabilities in design, development, SEO, content writing and mobile app development , we are proud to be a leading web design company in Chennai offering holistic and enduring solutions. Company Size: 0 – 20 Founded In: 2017 Services Offered by the Company: Web Designing & Development, E-commerce Web Development, Search Engine Optimization, Digital Marketing, Branding, Google Adwords, Domain…
அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் கோதாவில் குதிக்கின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால்பதித்தது. கோலி-சூர்யா கூட்டணி வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை துவம்சம் செய்யும் சூர்யகுமார் யாதவின் பிரமாதமான ஷாட்டுகள் பரவசமூட்டுகின்றன. இதே போல் திரில்லிங்கான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 82…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ்(869 புள்ளி) தற்போது அதை தக்கவைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 779 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடந்த வார நிலவரத்தின்படி டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தவிர இந்திய வீரர்களில் முதல் 10 இடங்களில் விராட் கோலி மட்டும் தான் இருந்தார்(10-வது இடம்). இந்த நிலையில் தற்போது அவர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 9, 2022 நிலவரப்படி) சூர்யகுமார் யாதவ் – 869 புள்ளிகள் முகமது ரிஸ்வான் – 830 புள்ளிகள் டெவோன் கான்வே -…
அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக அடிலெய்டு மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து இந்திய அணிக்கு திரும்பிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் அணியின் விக்கெட் கீப்பராக முதல் 4 லீக் போட்டிகளில் செயல்பட்டார். கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் முதல் 4 போட்டிகளில் களமிறங்காத ரிஷப் பண்ட்-க்கு , ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அரையிறுதியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார் என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில்…
தஞ்சாவூர்; தேங்கி நிற்கும் கழிவுநீரால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக காமராஜர் மார்க்கெட்டின் அவலநிலை எப்போது மாறும் எனவும், புதிய மார்க்கெட் எப்போது செயல்பாட்டிற்கு வரும் எனவும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்காலிக காமராஜர் மார்க்கெட் தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.இந்த மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93-ம், சில்லரை விற்பனை கடைகள் 212-ம், தரைக்கடைகளும் இருந்தன. தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காமராஜர் மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிதாக மார்க்கெட்…
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு திருவையாறு கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்தப் புறவழிச்சாலை திட்டத்துக்காக நன்செய் நிலங்களைக் கைப்பற்றி அழிக்க வேண்டாம் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பறிபோவதை உணா்த்தும் வகையில் விவசாயிகள் வாழை இலை, வாழைத்தாா், நெற்கதிா்கள், நாற்றங்கால்கள், தேங்காய், கருப்புக் கொடி போன்றவற்றை கையில் ஏந்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னோடி விவசாயி புனவாசல் டி. சம்பந்தம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
தஞ்சாவூர்; ஆமை வேகத்தில் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் 4 ஆண்டுகள் ஆகியும் சிவகங்கை பூங்கா பொலிவு பெறாமல் உள்ளதால் 150-வது ஆண்டுகள் கொண்டாட்டம் தடைபடுகிறது. எனவே பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை பூங்கா தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்கா, பெரியகோவிலை ஒட்டியுள்ளது. இந்த பூங்காவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் சிவகங்கை குளம் உருவாக்கப்பட்டது. இதை சுற்றி பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1871-72-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் காலத்துக்கேற்றவாறு அவ்வப்போது புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளன. www.Thanjavurnews.in தஞ்சை பகுதி மக்கள் மட்டுமல்லாமல், வெளியூா் மக்களிடையேயும் இந்த பூங்கா பிரபலமானது. இதனால் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவுக்கும் வந்து செல்வது வழக்கம். இதனால் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்வா். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். நீர் சறுக்கு பூங்காவில் ஏராளமான பசுமையான மரங்கள்,…
தஞ்சையில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக வடிகால் உடைந்ததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சாய்ந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்கும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். மழை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தஞ்சை மாநகரில் நேற்றுமாலை 3½ மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இடியுடன் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை கீழவாசல் கந்தப்பொடிக்கார தெருவில் இடிப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சை ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு முன்பு மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் தங்களது உடமைகளை தரையில் வைக்க முடியாமல் அவதிப்பட்டனர். தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியில் உள்ள அகழியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து வடிகால் மூலம் வடவாற்றிற்கு தண்ணீர்…

