Author: Karthick

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037 வது சதய விழா திருமுறையுடன் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037- வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து அப்பர் பேரவை சார்பில் திருமுறை பாராயணம் நடைபெற்றது. முதல்நாளான இன்று கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் இரண்டாம் நாளான நாளை காலை 8 மணிக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். பின்னர் திருமுறை வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். மேலும், பெருவுடையாருக்கும், பெரிய நாயகிக்கும் 48 வகையான பேராபிஷேகமும் நடைபெற உள்ளது.…

Read More

பெர்த், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. மாறாக நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி பவர்பிளே முடிவில் 2…

Read More

சென்னை, கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். இந்நிலையில், கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ந் தேதி அன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரது கரங்களால் அந்த விருது வழங்கப்படவுள்ளது. புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இடம்…

Read More

பப்பாளியின் காய் மற்றும் பழத்தைப் போலவே அதன் விதைகளும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டவை. இதில் பாலிபீனால், பிளேவனாய்டுகள், ஆன்டிஆக்சிடன்டுகள் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ஸ் அதிகம் உள்ளன. பப்பாளி விதைப் பொடியை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு முன்பு தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்ப்போம். கொழுப்பைக் குறைக்கும்: பப்பாளி விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம் மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி நச்சுக்களை வெளியேற்றும்.இதனால் உடல் எடை குறையும். ரத்த அழுத்தம் சீராகி, இதயம் பலம் பெறும். மாதவிலக்கை சீராக்கும்: பப்பாளி விதைகளில் உள்ள ‘கரோட்டின்’, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்கும். இதனால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி குறையும். சரும பராமரிப்பு:…

Read More

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். சிட்னி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் அதிரடியால் 179 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக…

Read More

சிட்னி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் அதிரடியால் 179 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்துக்கு (989 ரன்கள்) முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே போல் இன்று…

Read More

தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார். சதய விழா தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது. 3-ந்தேதி பெருவுடையார், பெரியநாயகிஅம்மனுக்கு பேரபிஷேகம், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா வருகிற 3-ந் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்று…

Read More

சென்னை, ‘மீகாமன்’, ‘தடம்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கலகத் தலைவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது ‘கலகத் தலைவன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

சென்னை, கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. https://www.youtube.com/watch?v=R5gnRBV6Nn4 இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்

Read More

ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட காந்தாரா படம், வெளியான 20 நாட்களிலேயே, கன்னடத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கே.ஜி.எப். படத்தின் பிரமாண்டத்திற்குப் பிறகு, இந்திய ரசிகர்களின் பார்வை, கன்னட சினிமாவின் மீதும் பதிந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை ‘777 சார்லி’, ‘காந்தாரா’ போன்ற திரைப்பட இயக்குனர்களும், நடிகர்களும் காப்பாற்றி வருகிறார்கள் என்பதே பெருமைக்குரியதுதான். எம்.பி.ஏ., பட்டதாரியான ரிஷப் ஷெட்டி, கன்னட அரசு சினிமா கல்லூரியில் பிலிம் டைரக்‌ஷனில் டிப்ளமோ பட்டமும் பெற்றவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர் இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்த ரிஷப் ஷெட்டி, 2010-ம் ஆண்டு ‘நம் ஏரியாலி ஆன்டினா’ என்ற படத்தின் மூலமாக சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், இயக்கமும் அவர் கனவாக இருந்தது. 2016-ம் ஆண்டு கன்னடத்தின் இளம் நாயகனான ரக்‌ஷித் ஷெட்டியை வைத்து, ‘ரிக்கி’ என்ற படத்தை இயக்கினார். அதே ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.…

Read More