இந்தியா vs நியூசிலாந்து டி20 சிறப்பம்சங்கள்: ஞாயிற்றுக்கிழமை மவுண்ட் மவுங்கானுயில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்ததால் சூர்யகுமார் யாதவ் தனது பணக்கார வடிவத்தைத் தொடர்ந்தார். T20I தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் எடுத்தார், இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 191/6 என்ற மாபெரும் வெற்றியைப் பெற்றது. பதிலுக்கு, நியூசிலாந்து 18.5 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 19வது ஓவரில் தீபக் ஹூடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் 2.5 ஓவர்களில் 4/10 என்ற விதிவிலக்கான எண்ணிக்கையுடன் திரும்பினார். அதேசமயம், டி20யில் சூர்யகுமாரின் இரண்டாவது சதம் இதுவாகும். மைல்கல்லை முடிக்க அவர் 49 பந்துகளை எடுத்தார், இதில் பதினொரு 4கள் மற்றும் ஏழு 6கள் இடம்பெற்றன. டிம் சவுத்தியும் முந்தைய நாள் தனது ஹாட்ரிக்கை முடித்தார். வேகப்பந்து வீச்சாளர்…
Author: Karthick
வெலிங்டன், நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக பணியாற்ற உள்ளனர். இதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. சமீபத்தில் இவ்விரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறிய பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் இதுவாகும். இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் படை களத்தில் குதிக்கிறது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட் போன்ற அதிரடி சூரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். உலக கோப்பையில்…
சொந்த வீடு கட்ட 1ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை!வீடு கட்டும் யோகம் தேடிவரும். இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால்! சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது. சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்ட பலபேரின் வேண்டுதல் நிறைவேறாமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம். சொந்த வீடு, கட்ட வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று சின்ன சின்ன, கல்லை அடுக்கி வைத்து விட்டு வந்தாலே போதும். அவர்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. பல பேரின் வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன இந்த…
கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.* கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு…
அசிதாங்க பைரவர் ருரு பைரவர் சண்ட பைரவர் குரோத பைரவர் உன்மத்த பைரவர் கபால பைரவர் பீஷண பைரவர் சம்ஹார பைரவர் மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன. வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம். எட்டு பைரவர்களின் வாகனங்கள்: அசிதாங்க பைரவர் – அன்ன வாகனம் ருரு பைரவர் – காளை வாகனம் சண்ட பைரவர் – மயில் வாகனம் குரோத பைரவர் – கருட வாகனம் உன்மத்தபைரவர் – குதிரை வாகனம் கபால பைரவர் – யானை வாகனம் பீஷண பைரவர் – சிம்ம வாகனம் சம்ஹார பைரவர் – நாய் வாகனம் மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.…
ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த ஆயிரத்து எட்டு லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது. இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல்: 1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அஹிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி லிங்கம் 11 அங்கு லிங்கம் 12 அசரிய லிங்கம் 13 அசுர லிங்கம் 14 அசை லிங்கம் 15 அசோக லிங்கம் 16 அச்சு லிங்கம் 17 அஞ்சா லிங்கம் 18 அட்ட லிங்கம் 19 அட்ச லிங்கம் 20 அட்சதை லிங்கம் 21 அட்டோ லிங்கம் 22 அடிமுடி லிங்கம் 23 அடி லிங்கம் 24 அணணா லிங்கம் 25 அண்ட லிங்கம் 26 அணி லிங்கம் 27 அணு லிங்கம் 28…
போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து ‘கடவுளைப் போல உதவினீர்கள்… என் வரையில் நீங்களே கடவுள்’ என்று சொல்வோம், அல்லவா…!அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே…
ஐயப்பன் வரலாறு : ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும் தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான்.…
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். https://www.youtube.com/watch?v=N-pvp7GSD3Y லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் இன்று (நவம்பர் 14-ந் தேதி) மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி நடிப்பில் இந்த வருடம் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. சர்தார் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். சர்தார் படத்தில் இடம்பெற்ற கார்த்தியின் வயதான தோற்றம் ரசிகர்களை கவர்ந்ததால் இரண்டாம் பாகம் படத்திலும் வயதான கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று திரைக்கதை அமைக்க உள்ளனர். இதுவரை கார்த்தி 24 படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்து 25-வது படமாக ஜோக்கர் படம் மூலம் தேசிய விருது பெற்ற ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடிக்கிறார். ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் கார்த்தியின் வித்தியாசமான புதிய தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

