ராணிக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். லண்டன், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராணி எலிசபெத் மறைவு செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர். இந்த நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானத்தில் நேற்று இரட்டை வானவில் தோன்றியுள்ளது. இதனை ராணிக்கு அஞ்சலி செலுத்த வெளியில் கூடியிருந்த பொதுமக்கள்…
Author: Karthick
இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஆசிய கோப்பை 2022, சிறப்பம்சங்கள்: விராட் கோலி நவம்பர் 2019 க்குப் பிறகு தனது முதல் சதத்தை அடித்தார், வியாழன் அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோஹ்லி வெறும் 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் கேப்டன் கேஎல் ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார், இந்தியா துடுப்பாட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, இலக்கை எளிதில் பாதுகாத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரன் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் (5/4) பந்தில் மிளிர்ந்தார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்புமுகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. சிறப்பு முகாம் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடக்கிறது. 11 வகையான ஆவணங்கள் எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அவர்கள் வழக்கமாக வாக்குச்செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் அவர்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை…
தஞ்சாவூர் ும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை மீட்டுக்கொண்டுவர சிலைகடத்தல் தடுப்பு பிரிவு பேலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிலை திருட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சுந்தரபெருமாள் கோவில். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் ராஜா, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி ஒரு புகார் அளித்தார். அதில், சவுந்தராஜபெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டு அதற்கு பதிலாக போலியாக ஒரு சிலையை வாங்கி வைத்துள்ளனர். 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் அந்த சிலை திருடிப்பட்டிருக்கலாம். எனவே கோவிலில் திருடப்பட்ட பழங்கால உலோக சிலையை விசாரணை செய்து மீட்டு…
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பகுதியில் அதிக பட்சமாக 37 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. பரவலாக மழை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை பெய்யவில்லை. வெயில் காணப்பட்டது. பின்னர் மாலையில் சிறிது நேரம் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக குடிசை வீடு இடிந்து சேதம் ஆனது. தஞ்சையில் அதிகம் தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த…
10 ஆம் நூற்றாண்டில் தென் துணைக் கண்டத்தில் சோழ வம்சம் ஒரு சக்திவாய்ந்த பேரரசாக மாற வழிவகுத்த நிகழ்வுகளின் பெரும் மறுபரிசீலனைக்கு இந்த காட்சி உறுதியளிக்கிறது. இன்று சென்னையில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் டிரைலருக்கு குரல் கொடுக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையைப் பற்றிய கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு, பொன்னியின் செல்வன்: முதல் பாகம் மணிரத்னம், ஜெயமோகன் மற்றும் குமரவேல் எழுதிய திரைக்கதை. PS1 இரண்டு பகுதி திரைப்படத் தொடரின் முதல் படமாக இருக்கும். https://www.youtube.com/watch?v=D4qAQYlgZQs நடிகர்களில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், குந்தவையாக திரிஷா, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி என பல ஏ-லிஸ்டர்கள் உள்ளனர். அஸ்வின் காக்குமானு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, சரத் குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ரஹ்மான்,…
இந்தியா மற்றும் இலங்கை ஆசியக் கோப்பை 2022 சிறப்பம்சங்கள்: செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி ஒரு பந்து மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 57 ரன்களும், அவரது தொடக்க பங்குதாரர் பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் தசுன் ஷனக ஆகியோர் முறையே 52 மற்றும் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக, பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா அதிகபட்சமாக 41 பந்துகளில் 72 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்க (3/24), சாமிக்க…
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. அதன்படி நேற்று காலை முதல் வெயில் காணப்பட்டது. மதியம் 3 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் 4 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென மழை பெய்ததால் வெளியே சென்றிருந்தவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பினர். பின்னர் சிறிது நேரம் மழை இன்றி காணப்பட்டது. பின்னர் மீண்டும் மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. 2 வீடுகள் இடிந்தன தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சையில் 28 மில்லி மீட்டரும், வல்லத்தில் 9 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழைக்கு ஒரு…
தஞ்சை மாநகரில் சதுர்த்தியையொட்டி 52 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கரந்தை வடவாற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம், வாடிவாசல் கடைத்தெரு, பில்லுக்காரத்தெரு, செக்கடித்தெரு, பூக்காரத்தெரு, கரந்தை மார்க்கெட், அண்ணாநகர், பர்மாகாலனி, மானம்புச்சாவடி, கீழவாசல், மேலவீதி, வடக்குவீதி, சீனிவாசபுரம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி, விஸ்வரூப விநாயகர் விழாக்குழு, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 74 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. 3-ம் நாளான நேற்றுமாலை தஞ்சை மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு லோடு ஆட்டோக்கள், ஆட்டோக்கள், வேன் ஆகியவற்றின் மூலம் தஞ்சை ரெயிலடிக்கு கொண்டு வரப்பட்டன. ஊர்வலம் பின்னர் பா.ஜ.க. பொருளாளர் விநாயகம் தலைமையில் தேசிய பொதுக்குழு…
தஞ்சை மானம்புச்சாவடி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பிரபுராம். இவரது வீட்டில் அடையாளம் தெரியாத உயிரினம் காணப்படுவதாக வனத் துறைக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை வனச்சரகர் ரஞ்சித் ஆலோசனையின் பேரில் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைசேர்ந்த சதீஷ்குமார், ரேவந்த், வினோத் ஆகியோர் பிரபுராம் வீட்டுக்கு சென்று மர நாயை மீட்டனர்.அழிவின் விளிம்பில் உள்ள உயிரின பட்டியலில் உள்ள இந்த மர நாய் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக உள்ளது. நகரப் பகுதியில் அரிதாக தென்படும் இந்த மர நாய் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, நேற்றுமாலை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி முன்னிலையில் தஞ்சை அருகே உள்ள காட்டில் விடப்பட்டது.

