Author: Karthick

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. இதனால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்யப்படுவதில்லை. மாரியம்மன்கோவில் கிராமமக்கள் சார்பில் ஆண்டுதோறும் புஷ்பாபிஷேக பெருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான புஷ்பாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. கிராமமக்கள் பூக்கூடைகள், பூத்தட்டுகளை எடுத்து கொண்டு சிவன்கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் மகாமாரியம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாரியம்மன்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், நித்திய வழிபாட்டுக்குழு செயலாளர் சாவித்திரி மகாலிங்கம், சிவராத்திரி கமிட்டி தலைவர் சரவணவேல், புஷ்பாபிஷேக பெருவிழா விழாக்குழு நிர்வாகிகள் கார்த்திகேயன், வேணு.கண்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read More

தஞ்சாவூர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைகிறது. அந்த தண்ணீர் கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணற்போக்கி 5 ஷட்டர்கள் உள்பட 35 ஷட்டர்களில் இருந்தும் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி கல்லணையில் இருந்து 41 ஆயிரத்து 240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது. நேற்று முன்தினம் 50ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறக்கப்படும் அளவு சற்று குறைந்தது. சுற்றுலா பயணிகள் இதேபோல, கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 8,004 கன அடி, வெண்ணாற்றில் 8007 கன அடி, கல்லணை கால்வாயில் 2,608 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கல்லணை கொள்ளிடம் ஆற்றில்…

Read More

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைகிறது. கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கொள்ளிடம் மற்றும் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தநிலையில் உபரி தண்ணீர் அணைக்கரை கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கரை வீராகண் ஊராட்சி வாண்டையார் இருப்பு பகுதியில் கொள்ளிடம் கரையோரம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நீர்வளத்துறையின் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீட்பு மேலும், அணைக்கரை விநாயகன் தெரு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள்…

Read More

அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உதவி இயக்குனர்கள் பழனிவேல் (நோய் புலனாய்வு பிரிவு), சையதுஅலி, கால்நடை உதவி மருத்துவர் செரீப் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்க்கும் இடத்திற்கு சென்று பன்றிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? நோய் அறிகுறிகள் எதுவும் தென்படுகின்றனவா? என ஆய்வு மேற்கொண்டனர். பன்றி காய்ச்சல் பரவும் விதம், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

Read More

தஞ்சாவூர் மேட்டூர் அணையில் இருந்து அதிகபட்சமாக தண்ணீரை திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணையை வந்து சேருவதற்கு முன்னதாக திருவளர்ச்சோலை அருகே உள்ள தரைப்பாலத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வழிந்து ஓடி கொள்ளிடத்தில் கலக்கிறது. திருவளர்ச்சோலை தொடங்கி கிளிக்கூடு கிராமம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் வழிந்தோடி வருவதால் நேற்று 2-வது நாளாக திருவானைக்காவல், திருவளர்ச்சோலை வழியாக கல்லணைக்கு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய ஊர்களில் இருந்து கார்களில் இந்த வழியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு கிளிக்கூடு கிராமத்தின் அருகே திருச்சி போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் வேங்கூர், சர்க்கார் பாளையம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் சுற்றுப் பாதையில் செல்ல…

Read More

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் அய்யம்பேட்டை அருகே உள்ள கிராம பகுதிகளை வந்தடைந்தது. தொடர்ந்து தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது இந்தநிலையில் நேற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.…

Read More

தஞ்சாவூர் கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் நேற்று மாலை நிலவரப்படி அந்த அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் கன அடி தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு தடுப்பணையில் இருந்து காவிரி ஆற்றில் 56,254 கன அடியும் கொள்ளிடத்தில் 90,405 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 7,003 கன அடி, வெண்ணாற்றில் 7,005 கன அடி, கல்லணை கால்வாயில் 2,219 கன அடியும்,…

Read More

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும். பூச்சொரிதல் விழா அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது. இந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்களில் அம்மன் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு,…

Read More

தஞ்சாவூர் அலையாத்தி காடுகள், கடலின் முகத்துவாரங்களில் இருக்கும். ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள். கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மையை உடையதால் இவை அலையாத்தி காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அலையாத்தி காடுகள் என்பவை கடலோர உப்பு தன்மையை தாங்கும் திறன் கொண்ட தாவரங்களாகும். தஞ்சை மாவட்டத்தில் வெண்கண்டல், சுரபுன்னை, தில்லை, தீப்பரத்தை ஆகிய 4 வகை அலையாத்தி மர வகைகள் உள்ளன. இயற்கையாக ஆற்று கழிமுக துவாரங்களில் இவை வளர்ந்து உள்ளன. இவை கஜா புயல் வீசியபோது அங்குள்ள மக்களை பாதுகாத்துள்ளன. எனினும் அலையாத்தி காடுகளின் ஒரு பகுதி கஜா புயலின்போது சேதமடைந்தன. கடல் வளம் பாதுகாப்பு மேலும் அலையாத்தி காடுகள், வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை இழுத்து பூமியில் சேமித்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் இவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. தஞ்சை மாவட்டத்தில் மீன், நண்டு மற்றும் இறால் போன்றவை இயற்கையாக உற்பத்தியாகி,…

Read More

தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தினமும் காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவிகள் அவர்கள் விண்ணப்பிக்கும்போது அளித்துள்ள செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு சேர்க்கைக்கான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. கல்லூரியில் உள்ள 14 பாடப்பிரிவுகளில் மொத்தம் உள்ள 1,224 இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கீழ்கண்டவாறு நடைபெறும். மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்கள், 3 நகல்கள், சிறப்பு கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும். வருகிற 5-ந் தேதி சிறப்பு ஒதுக்கீடு (விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி) மாணவிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 6-ந் தேதி பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 8-ந் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ. வரலாறு, பி.பி.ஏ., பி.எஸ்.சி. வேதியியல்,…

Read More