தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முதல்வர் ரோசி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2022-23 -ம் கல்வி ஆண்டில் இளநிலை (பி.லிட், பி.ஏ., பி.எஸ்சி, பி.காம்., பி.பி.ஏ.) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான பாடப்பிரிவுகளும், அதற்கான தேதிகளும் கல்லூரி இணைய தளத்தில் (www.rsgc.ac.in) வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இத்தகவல் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Author: Karthick
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் ஆடிப்பெருக்கு என்னும் மங்கள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு நேற்றுகாலை முதலே பெண்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். விளக்கேற்றி வழிபாடு பின்னர் பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், மலர், பேரிக்காய், கொய்யா,…
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு 2022-23-ம் ஆண்டிற்கு 2 திட்டங்களுடன் கூடிய கொரோனா உதவி மற்றும் தொழில் முனைவோருக்கான நிவாரண திட்டத்தை அறிவித்து ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது. இதில் மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நலிந்த தொழில்முனைவோர்கள் மீண்டும் தொழில்களை நிறுவிட மற்றும் புதிய நிறுவனத்தை தொடங்கிட அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ரூ.5 கோடி 2020-21-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், உரிமையாளர் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சேவைத்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன்மூலம் பயன்பெறலாம். அதிகபட்ச திட்ட செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாகவும் இருக்கும். இந்த மானியத்திட்டம் சிறு, குறு…
தஞ்சையை அடுத்த களிமேடு அருகே உள்ளது பிருந்தாவனம் நகர். இந்த பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பாலப்பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதையடுத்து பாலத்துக்கு அருகே உள்ள பிருந்தாவனம் நகர் பகுதிக்கு செல்லும் குடிநீர் தடைபட்டது. கடந்த ஒரு மாதமாக அவர்களுக்கு குடிநீர் செல்லவில்லை. மேலும் பாலப்பணிகளும்விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் குடிநீர் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் குடிநீர் வரவில்லை. திடீர் மறியல் இதையடுத்து அந்த பகுதி மக்கள் சிறிது தூரம் சென்று தஞ்சை மாநகராட்சி எல்லையிலும், அருகே உள்ள ஊராட்சி பகுதிக்கும் சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டும் எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டு பிருந்தாவனம் நகர் பகுதிக்கு…
SK Webventure is an independent company of multi-disciplinary experts with a vision to empower clients with enriching and inspiring solutions. We have helped clients conquer the digital frontier in an ever-changing online landscape and offer exceptional service tailored to your brand and needs. With rich capabilities in design, development, SEO, content writing, printing and advertising, we are proud to be a leading web design agency in Thanjavur and Tirchy offering holistic and enduring solutions. Services List Logo Design and RedesignWeb Design and Development ServicesSEO ServicesSEM ServicesEcommerce Website DevelopmentPayment Gateway DevelopmentDigital Marketing ServicesContent Writing Services and more servicesDomain and Web Hosting…
‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் ‘விருமான்’ படத்தில் நடித்தார் நடிகர் கார்த்தி. இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு எஸ்.கே. செல்வகுமார். இந்த படத்தின் “கஞ்சா பூவு கண்ணால” பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு இன்று (03 ஆகஸ்ட் 2022) நடைபெறவுள்ளது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவும் கலந்து கொள்கிறார் . விழா “மதுரை ராஜா முத்தையா மன்றத்தில்” நடைபெறும். அதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விருமன், தென் தமிழ்நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், குறிப்பாக தேனியில் நடக்கும் கிராமிய நாடகமாகும். இந்தப் படம் குடும்பம்…
தென் ஆப்பிரிக்கா அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. சவுத்தாம்ப்டன், தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து நடந்த டி20 தொடரின் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 70 ரன்களை எடுத்தார். மார்க்ரம் 51 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 192…
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 190 ரன்கள் குவித்து எதிரணியை 122 ரன்னில் மடக்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதே வேளையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்காகவும், முதல் வெற்றிக்காகவும் கடுமையாக போராடும். தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். எனவே, இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. இந்த ஆட்டம்…
தஞ்சை மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் ரூ.10 கோடியில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சி தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக கடந்த 2014-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பஸ் நிலையம், மார்க்கெட், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் அபிவிருத்தி பணிகள், சோலார் விளக்குகள் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள பூங்கா சீரமைக்கப்பட்டும், புதிதாக பூங்கா அமைக்கப்பட்டும் வருகிறது. 1,400 கண்காணிப்பு கேமரா இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி தஞ்சை மாநகரம் முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த கேமராக்கள் தஞ்சை…
திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலைய பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும் திருக்காட்டுப்பள்ளி, பழமானேரி, கச்சமங்கலம், இளங்காடு, மாரனேரி, சுக்காம் பார், திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, நாகாச்சி, பூண்டி, வடுகக்குடி, வரகூர், கண்டமங்கலம் விஷ்ணம்பேட்டை, கூத்தூர், மகாராஜபுரம், சாத்தனூர், வளப்பக்குடி, கடம்பங்குடி, நடுக்காவேரி, உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பூண்டிமற்றும் ராகவம்பாள் புரம் துணை மின்நிலையத்தில் வருகிற 2- ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவப்புரம், வாளமர்கோட்டை,…

