தஞ்சாவூர் அருள்மிகு நீசும்பசுதனி வடபத்ரகாளியம்மனுக்கு ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
Author: Karthick
இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எல்பிஜி மானியம் 2023 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மானியம் குறித்த தகவல்: இந்தியாவில் கிராமங்கள்தோறும் ஏழை மக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பாஜக அரசு உஜ்வாலா எனும் திட்டத்தை துவங்கியது.2020ம் ஆண்டுக்குள் 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் 2.0 தொடங்கப்பட்டது. இதன் மூலம் சிலிண்டர், அடுப்பு ஆகியவை ஒரு கோடி பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது வரை பிரதமரின் சிலிண்டர் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து…
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் உடனே காலி செய்ய இந்து சமய அறநிலைய துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் உத்தரவு
கொரோனா வருகையால், அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் சென்ற ஆண்டின் மத்தியில் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர வாய்ப்புள்ளது. அகவிலைப்படி (DA) 4% உயர்வு; அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். அகவிலைப்படி (DA) என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அகவிலை நிவாரணம் (DR) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசு திருத்தி அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜனவரியில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது. அதாவது ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்கள்…
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ திட்டத்தை மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனால் பல லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பற்றி இந்த பதிவில் காண்போம். மருத்துவ திட்டம்: இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டு அரசுகளும் சிறப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணியாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இத்தைகைய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு என்று குறிப்பிட்ட தொகையினை நிர்ணயம் செய்து அதற்குள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் வரையறையை பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை…
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு இது ஒரு பதட்டமான வெற்றியாகும். இந்தியா 309 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பிறகு, முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் புரவலர்களுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முதல் ஐந்து பந்துகளில் 10 ரன்கள் கொடுத்தார். கடைசி பந்தில் சமன்பாடு எளிமையாக இருந்தது – ஐந்து வெற்றி அல்லது நான்கு போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்ல வேண்டும். இறுதிப் பந்தில், சிராஜ் யார்க்கரை அடிக்க முயன்றார், ரோமாரியோ ஷெப்பர்ட் வேலைநிறுத்தத்தில் இருந்தார். அது பேட்டரைக் கடந்து லெக் ஸ்டம்பை நோக்கிச் சென்றது, ஆனால் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரியை நிறுத்தி இந்தியாவை வெற்றிபெற அழைத்துச் சென்றார். @BCCI 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஒரு அற்புதமான இறுதி ஓவர், @mdsirajofficial மூலம் எஃகு நரம்புகள்! இந்தத் தொடருக்கு…
தமிழ் மாதங்களில் ஆடி என்பது ஆன்மிக சிறப்பு மிகுந்த பக்தி மாதம். ஆடி மாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு என ஆடி மாதமே கோலாகலமாக இருக்கும். ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்று அழைப்பார்கள்.ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகவும், ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும், மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமண தடைகள் விலகும், ஆயுள் விருத்தியாகும் என்பதால் பெண்கள் பல கோவில்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்பாளை தரிசனம் செய்வது வழக்கம்.
தஞ்சை மாநகராட்சியை பொருத்தவரை வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி மென் மேலும் அலங்கரிக்கபடுகிறது.. நடுத்தர மக்கள் வாழும் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.. வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளின் சாலை ஓரங்களை மெருகூட்டுவதற்கு செலுத்தும் அக்கறையில் சிறு துளியை கூட மற்ற பகுதிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் செலுத்துவதில்லை.. தஞ்சை பர்மாகாலனி மாரிகுளம் சுடுகாட்டை ஓட்டிய சாலையில் உள்ள பாதாள சாக்கடை எப்போதும் சாலை மற்றும் அருகிலுள்ள மழை நீர் வடிகாலில் வழிந்தோடுகிறது. இந்த சாலையை கடந்து செல்லும் போதே துர்நாற்றத்தால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அதன் அருகில் வசிப்பவர்களின் நிலையை சொல்லவே தேவையில்லை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி சார்பில் இதுவரை எந்த முயற்சியும் இல்லை. தஞ்சை மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது.. மற்ற பகுதிகளில் இது போல் அலட்சியம் காட்டபடுவதில்லை.. மேலும் தஞ்சை பூக்கார தெரு சுப்ரமணியர் சுவாமி கோவில்…
68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் “சூரரைப் போற்று” திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைப்படம், திரைக்கதை உள்ளிட்ட 5 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக வசந்த் இயக்கிய “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழ் படங்கள் மட்டும் 10 விருதுகளை வென்றுள்ளன. 2020 ஆம் ஆண்டில், கோவிட் 19 தொற்று காரணமாக பல மாதங்கள் திரையரங்குகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வழக்கத்தை விட குறைவான படங்கள் வெளியாகின. அவற்றுடன் புதிய திரைப்படங்களும் நேரடியாக OTT தளங்களில் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகளை புதுதில்லியில் அறிவித்தனர். சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான படம் “சூரரைப் போற்று”. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக அபர்ணா…
ஒருநாள் போட்டியில் இறுதியாக இங்கிலாந்து அணியில் நாளை நடைபெற உள்ள போட்டியில் விளையாட போகிறேன் “அதன்பின்னர் நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் இந்த கஷ்டமான முடிவுகளை எடுக்க முடிந்தது. சக வீரர்களுடன் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக தான் இருந்தேன். என்னால் இந்த ஒருநாள் போட்டிகளில் 100 சதவீதம் விளையாட முடியவில்லை.” “என்னால் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது, அது என்னால் முடியாது. அதுமட்டுமின்றி, நான் அணியில் இருக்கும்போது ஜோஸ் பட்லர் மற்றும் மற்ற வீரர்களுடைய இடத்தை நான் கைப்பற்றியது போல தோன்றுகிறது.” “நான் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த வீரருக்கு சரியான நேரம் அமைந்தால் நான் கடந்த 11 ஆண்டுகள் என்ன செய்தேனோ, அதனை அவரும் செய்வார்.இந்த முடிவுக்கு பிறகு என்னால் 100 சதவிதம் டெஸ்ட் மற்றும்…

