முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. மீண்டும் பரபரப்பு கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு என அ.தி.மு.க.வில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. இதற்கிடையே அ.தி.மு.க. வில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ந்தேதியும் (நேற்று), 19-ந் தேதியும் (இன்று) நடைபெறும்’ என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க. தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு…
Author: Karthick
இன்று காலை Jogging சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 300 மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் என் வேகத்தில் தான் ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றேன். சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 50 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன். எனக்குள் ” அவரைக் கடந்து விட்டேன்”, என…
ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது…அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும்…
திருப்பதி: திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைக்கேடுகளை தடுக்க, வெப்கேம் பரிசோதனையுடன் கூடிய அதிநவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் காரணமாக சாமானியர்கள் எளிதாக அறைகளை புக்கிங் செய்ய முடியும். ஒருவேளை யாராவது முறைகேடு செய்தால் முன்பணம் திரும்ப செலுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் தங்குவதற்காக 7 ஆயிரம் அறைகள் கொண்டு தங்கும் விடுதியை திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோடிக்கணக்கான பணத்தை தினமும் காணிக்கையாக கொட்டுகிறர்கள். அப்படி பக்தர்களால் கொடுக்கப்படும் பணம் மூலம் பக்தர்களுக்கு, தங்கும் விடுதி வசதி, அன்னதானம், கழிவறைகள், நிழற்கூடங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்பதி திருமலையில் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பதி அறை வாடகைகுறிப்பாக ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக மிகக்குறைந்த விலையில் மிகத்தரமான…
இன்று மார்ச் 1ஆம் தேதி என்பதால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.1118.50 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் , வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.1068.50 க்கு விற்பனை செய்யப்பட்டது
இந்த இரு குழந்தைகளும் யார் என்று தெரியவில்லை தற்பொழுது ஜெய்லானியா பள்ளிவாசலில் சுப்ரமணியபுரம் திருச்சி. இரு குழந்தைகளும் இருக்கிறார்கள் இவர்கள் பெற்றவர்கள் யார் என்று தெரியவில்லை தயவுசெய்து அவசர பதிவாக பகிரவும் பெற்றோர்கள் தெரியும் வரை பகிரவும்
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. அது நல்லதாகவும் இருக்கலாம், கேட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு குறித்த கனவு வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஜோதிடத்தின்படி, யாருக்கு ராகுதிசை ராகுபுக்தி நடைபெறுகிறதோ, அவர்களின் கனவில் பாம்பு வரும் என கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, பாம்பு பாலியல் குறியீடாகவும் கருதப்படுகிறது. அதே போல, ஆண்களுடனும் பாம்பு ஒப்பிடப்படுகிறது. அதாவது, ஒரு பாம்பு உங்கள் படுக்கையில் விழுவது போல கனவு கண்டால் அது பாலியல் சிற்றின்பத்தின் அடையாளமாக காணப்படுகிறது. நமக்கு பாம்பு குறித்த கனவு வந்தால், என்ன அர்த்தம் என்பதை இங்கே காணலாம். இயல்பாக நமது கனவில் பாம்பு வந்தால், நமது குலதெய்வ வழிபாடு விடுபட்டுள்ளதாக காலம் காலமாக கூறப்படுகிறது. அதாவது, குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்கள… கனவில் பாம்பு உங்களை விரட்டினால் வறுமை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். எனவே, இதை சுலபமாக எடுக்க…
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இன்று ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. கேப்டவுன், 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியாவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கேப்டவுனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள்…
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாரியம்மன்கோவில் மின்பாதை, ஆலங்குடி மின்பாதை, போஸ்டல்காலனி மின்பாதை ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம் நகர், ஆலங்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், பை-பாஸ், சித்தர்காடு, கடகடப்பை, காந்தாவனம், எடவாக்குடி, நெல்லித்தோப்பு, அன்னை இந்திராநகர், பனங்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேலும் மின்தடை தொடர்பான தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோடைகாலத்தில், லேசாக குளிர்விக்கப்பட்ட கரும்புச்சாறுடன், எலுமிச்சை மற்றும் இஞ்சிச்சாறு கலந்து பருகினால், உடனடியாக உடல் புத்துணர்ச்சி அடைவதை நம்மால் உணர முடியும். கரும்புச்சாறு நாவிற்கு சுவையூட்டுவது மட்டுமில்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. தண்ணீர், நார்ச்சத்து மற்றும் சுக்ரோஸ் நிறைந்த கரும்புச்சாறு, பாரம்பரிய மருத்துவத்தில் ஆரோக்கிய பானமாக பரிந்துரைக்கப்படுகிறது. கரும்புச்சாற்றில் உள்ள நன்மைகள் பற்றிய மேலும் பல தகவல்கள் இதோ ஆற்றலை அதிகரிக்கும்: உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான மூலப்பொருளான சுக்ரோஸ், இயற்கையாகவே கரும்புச்சாற்றில் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். செல்களுக்கு போதுமான நீர்ச்சத்தைக் கொடுக்கும். உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும். காலை உணவோடு ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகினால், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். காபிக்கு மாற்றாக கரும்புச்சாறு பருகுவது உடலுக்கு நல்லது. செரிமானத்தை சீராக்கும்: கரும்புச்சாற்றில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், வயிற்றின் அமில காரத் தன்மையை சமநிலைப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள்,…

